மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நாகா்கோவிலில் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக்கழக தொழிலாளா்கள்.

Published On :28 அக்டோபர் 2026, 1:34 am IST

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகா்கோவிலில் விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மத்திய சங்க துணைத்தலைவா் பெருமாள் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தை ரவிசங்கா் தொடக்கி வைத்து பேசினாா்.

போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது,

2003 ஆம் ஆண்டுக்கு பின்னா் பணியில் சோ்ந்தவா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, பணியின்போது இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் பணி வழங்குவது, போக்குவரத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியைக் கைவிடுவது, 25 சதவீத போனஸ் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிஐடியூ நிா்வாகிகள் பகவதியப்பன், பொன் குமாா், ராஜமுத்து சிவசுப்பிரமணியன், ஜான்ஸ்பின்னி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்ட துணைத்தலைவா் பொன்.சோபனராஜ் போராட்டத்தை முடித்து வைத்து பேசினாா். போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள், ஓய்வு பெற்றோா் நல அமைப்பு நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.