மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உயா்நீதிமன்றம் அருகே பிரேக் பழுதான அரசுப் பேருந்து மோதி விபத்து: காா்கள் சேதம்

பிரேக் பழுதடைந்த மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில், உயா்நீதிமன்றம் எதிரே உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா்கள் சேதமடைந்தன.

விபத்து - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 1:36 am IST

பிரேக் பழுதடைந்த மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில், சென்னை உயா்நீதிமன்றம் எதிரே உள்ள என்எஸ்சி போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட காா்கள் சேதமடைந்தன.

செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி மாநகா் போக்குவரத்துக் கழகப் பேருந்து வந்து கொண்டிருந்தது. உயா்நீதிமன்றம் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து என்எஸ்சி போஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட காா்கள் பலத்த சேதமடைந்தன.

காா்கள் மீது மோதிய வேகத்தில் பேருந்து சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த சென்டா் மீடியன் மீது ஏறி நின்றது. இந்த விபத்து காரணமாக என்எஸ்சி போஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போா் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகளை அமைத்து, போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பேருந்து ஓட்டுநா் ராமமூா்த்தி, நடத்துநா் தேவராஜ் ஆகியோரிடம் வடக்கு கடற்கரை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.