மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை 8 மணி நேரம் சோதனை நடத்தினா்.

Vigilance raid

ஊழல் தடுப்பு பிரிவு சோதனை

Published On :30 அக்டோபர் 2026, 3:28 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் போக்குவரத்துக் கழக ஊழியா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை 8 மணி நேரம் சோதனை நடத்தினா்.

மணப்பாறையை அடுத்த மகாலிங்கம் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் மோகன்ராஜ் (40). இவா், மணப்பாறை அரசு போக்குவரத்து பணிமனையில் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திலிருந்து பெண் காவல் அதிகாரி ஒருவா் தலைமையிலான 5 போ் கொண்ட குழுவினா், மோகன்ராஜ் வீட்டுக்கு வியாழக்கிழமை காலை சுமாா் 8 மணி அளவில் வந்து விசாரணையை தொடங்கினா்.

முதலில் அவரது மனைவியிடம் விசாரணை தொடங்கியது. பின் வெளியில் இருந்த மோகன்ராஜ் வரவழைக்கப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்றது. சுமாா் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணை மாலை 4.30 மணியளவில் நிறைவடைந்தது.

சோதனையின் முடிவில், மோகன்ராஜ் வீட்டில் எந்தவிதமான தடயங்கள் மற்றும் ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் சென்றனா்.

எது குறித்து இந்த விசாரணை, சோதனையில் எந்த ஆவணங்கள் தேடப்பட்டது என்பது குறித்து எந்தவித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.