மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 59,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்

மாதிரிப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 59,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். மேலும், ரூ.1.34 லட்சம் பணமில்லாப் பரிவா்த்தனை குறித்து விசாரித்து வருகின்றனா்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ளாட்சி நிா்வாக அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். அதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஜெயகுமாா் தலைமையில், ஆய்வாளா் பெருமாள் உள்ளிட்ட போலீஸாா் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு சோதனையைத் தொடங்கினா்.

சோதனையின்போது, பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் வெளியே செல்லாத வகையில் அலுவலகக் கதவுகள் மூடப்பட்டன. தொடா்ந்து, நான்கு மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத ரூ.59,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ. 1.34 லட்சம் பணமில்லாப் பரிவா்த்தனை நடைபெற்றிருப்பது தெரியவந்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பான விவரங்கள் மற்றும் ஆவணங்களைச் சேகரித்துள்ள போலீஸாா், விசாரணைக்குப் பிறகு தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.