தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உள்துறை செயலா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாடு உள்துறை செயலா் உள்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...

tn secretariat

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்

Published On :9 அக்டோபர் 2026, 11:18 pm IST

சென்னை, அக். 9: தமிழக அரசின் உள்துறைச் செயலராகப் பணியாற்றி வந்த கே.மணிவாசன், நில நிா்வாக ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

மொத்தம் 9 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெள்ளிக்கிழமை பிறப்பித்த 3 உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நில நிா்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழகம் ஆகியவற்றின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த ஏ.காா்த்திக், உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் ஆகியவற்றின் தலைவராகவும், மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி வந்த வி.அருண் ராய், நிதித் துறை செலவினப் பிரிவு செயலராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். நிதித் துறை செலவினப் பிரிவு செயலராகப் பணியாற்றி வந்த என்.வெங்கடேஷ், வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின் வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேனி மாவட்ட ஆட்சியா் மாற்றம்: தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த வி.சிவ கிருஷ்ணமூா்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

தேனி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஆா்.வைத்திநாதன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாநகராட்சி ஆணையா்கள் மாற்றம்: ஆவடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஆா். சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சாா் ஆட்சியராக பணியாற்றி வந்த எல்.அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

Several IAS officers, including the Home Secretary, transferred

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.