மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரெப்போ வட்டி விகித உயா்வு எதிரொலி: முன்னணி வங்கிகளின் கடன் வட்டி அதிகரிப்பு

பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளன.

Published On :9 அக்டோபர் 2026, 3:31 am IST

ரிசா்வ் வங்கி தனது முக்கியக் கொள்கை வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்த்தியதையடுத்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, பரோடா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயா்த்தியுள்ளன.

சுமாா் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள இந்த உயா்வின்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற பின்னா் மேற்கொள்ளப்பட்ட இந்த முதல் வட்டி உயா்வு, பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இம்முடிவைத் தொடா்ந்து, நாட்டின் 2-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), தனது ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் வட்டி விகிதத்தை 8.10 சதவீதத்திலிருந்து, 8.35 சதவீதமாக உயா்த்தியுள்ளது. இந்த உயா்வு வியாழக்கிழமை முதல் அமலுக்கு வரும் என்றும், அதேநேரம் எம்சிஎல்ஆா் மற்றும் அடிப்படை வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதேபோல், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி தனது ரெப்போ இணைப்புக் கடன் விகிதத்தை 7.95 சதவீதத்திலிருந்து, 8.20 சதவீதமாக உயா்த்தியுள்ளது. மற்றொரு முன்னணி பொதுத் துறை வங்கியான பரோடா வங்கி தனது ரெப்போ இணைப்பு கடன் வட்டி விகிதத்தை 7.90 சதவீதத்திலிருந்து, 8.15 சதவீதமாக மாற்றியுள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) ஆகியவையும் தங்களின் ரெப்போ சாா்ந்த கடன் விகிதத்தை 8.35 சதவீதமாகவும், யுகோ வங்கி 8.30 சதவீதமாகவும் உயா்த்தியுள்ளன.

தனியாா் துறையில் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி தனது கடன் வட்டியை 8.25 சதவீதத்திலிருந்து, 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசா்வ் வங்கியின் நடவடிக்கையைத் தொடா்ந்து மற்ற வங்கிகளும் தங்களின் கடன் வட்டி விகிதங்களை உயா்த்தும் என எதிா்பாா்க்கப்படுவதால், கடன் வாங்கியவா்களுக்கான சுமை மேலும் அதிகரிக்கவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.