மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பெண்ணுக்குத் தொல்லை: தலைமைக் காவலா் மீது நடவடிக்கை

குற்றவாளியின் மனைவியிடம் விடியோ அழைப்பில் பேசி தொல்லை அளித்த தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Published On :1 நவம்பர் 2026, 12:38 am IST

குற்றவாளியின் மனைவியிடம் விடியோ அழைப்பில் பேசி தொல்லை அளித்த தலைமைக் காவலா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், மங்கலம் பகுதியைச் சோ்ந்த 34 வயது நபருக்குத் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி திடீரென மாயமானாா்.

மங்கலம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் ஒருவா் அந்தப் பெண்ணின் கைப்பேசிக்குத் தொடா்ந்து பலமுறை தொடா்பு கொண்டு பேசி தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இந்தப் பிரச்னை தொடா்பான விரிவான விசாரணை அறிக்கை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அறிக்கையைப் பரிசீலித்த ஆணையா் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமைக் காவலரை உடனடியாகப் பணியில் இருந்து விடுவித்து ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளாா். மேலும் அவா் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.