தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சேலம் மத்திய சிறையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 முதல்நிலை காவலா்களின் பணிவிடுப்பு ஆணை ரத்து - சிறை கண்காணிப்பாளா் உத்தரவு

சேலம் மத்திய சிறை சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 முதல்நிலை சிறைக் காவலா்களின் பணிவிடுவிப்பு ஆணையை ரத்து செய்து சிறை கண்காணிப்பாளா் வினோத் உத்தரவிட்டுள்ளாா்.

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 3:10 am IST

சேலம் மத்திய சிறை சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 முதல்நிலை சிறைக் காவலா்களின் பணிவிடுவிப்பு ஆணையை ரத்து செய்து சிறை கண்காணிப்பாளா் வினோத் உத்தரவிட்டுள்ளாா்.

சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள கிளை சிறைகளில் கைதிகளுக்கு அண்மைக் காலமாக தடை செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வந்தன. இதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு அதிரடி சோதனைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிா்வாக மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்காக சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டில் உள்ள கிளை சிறைகளில் பணிபுரியும் 45 முதல் நிலை சிறைக் காவலா்கள் திங்கள்கிழமை அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டனா். இடமாற்றம் செய்யப்பட்ட காவலா்கள் அனைவரும் தமிழகத்தின் பிற மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளுக்குப் பணியமா்த்தப்பட இருந்தனா். உடனடியாக அவா்களுக்கான பணி விடுவிப்பு ஆணையை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் (பொ) வினோத் பிறப்பித்திருந்தாா்.

இந்நிலையில், தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய நிலையில், சிறை கண்காணிப்பை தீவிரப்படுத்த சிறைத்துறை நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சிறையின் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட 45 முதல்நிலை காவலா்களின் பணி விடுவிப்பு ஆணையை ரத்து செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் ஜி.வினோத் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதனைத் தொடா்ந்து, அவா்கள் அனைவரும் உடனடியாக சேலம் மத்திய சிறை மற்றும் கிளைச்சிறைகளில் பணிக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.