தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தேர்தல் 2026: தமிழ்நாட்டில் தவெக ஆட்சி? - நேரலை...

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப் பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள்...

News image

தொண்டர்கள் மத்தியில் கையசைக்கும் விஜய் - ANI

Updated On :5 மே 2026, 2:34 am IST

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணிக்கை மே 4 காலை 8 மணிக்குத் தொடங்கி நள்ளிரவையும் கடந்து நீடித்தது. 234 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிந்து அதிகாரபூர்வமாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி, 73 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சரை தவெக வீழ்த்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று, திமுக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட வன்னி அரசு 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி 85,179 வாக்குகள் பெற்று 33,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் விசிகவுக்கு 2 உறுப்பினர்கள் உறுதியாகியுள்ளனர்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள அரசுக்கு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜக - என்டிஏ கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் லட்சுமணன் 74,867 வாக்குகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவியுள்ளார்

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் தோல்வி அடைந்தார்.

துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு வெற்றி பெற்றுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார்.

ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் பேரவைத் தலைவருமான அப்பாவு தோல்வியை சந்தித்துள்ளார்.

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளா் சௌமியா அன்புமணி வெற்றி பெற்றுள்ளார்.

புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.

மன்னார்குடி சட்டப்பேரவைத் தேர்தல் 18-ஆவது சுற்று முடிவில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

எஸ்.காமராஜ் (அமமுக) - 55 ,029

டி.ஆர்.பி.ராஜா (திமுக) - 53 ,438

ஆர். பாரதி செல்வன் (நாதக) - 5919

யு. ராஜராஜன் - (தவெக) - 35,745

அமமுக வேட்பாளர் 1591 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை

தளி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி. ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தார்.

கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி பெற்றுள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வெற்றி பெற்றுள்ளார்.

ஜோர்ஹட் தொகுதியில் அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோயை , தனது போடியாளரான பாஜகவின் ஹிதேந்திரநாத் கோஸ்வாமியை விட 19,626 வாக்குகள் பின்தங்கியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முதல்வராக பொறுப்பேற்கவுள்ள தவெக தலைவர் விஜய், தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பொன்னேரி (தனி) தொகுதி 12-வது சுற்றில் தவெக 25,979 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காங்கிரஸ் - 27,487

அதிமுக - 28,818

நாம் தமிழர் கட்சி - 3,342

தவெக - 54,797

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் வகித்து வருகிறார்.

5 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

13வது சுற்றிலும் முதல்வர் மு. க. ஸ்டாலின் பின்னடைவு.

தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு நடிகை த்ரிஷா வருகை தந்துள்ளார்.

முன்னதாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அவர் தரிசனம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம்: சிவசாகர் தொகுதியில் அகில் கோகோய் முன்னிலை!

அஸ்ஸாமின் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரைஜோர் தளக் கட்சியில் தலைவர் அகில் கோகோய், பாஜக போட்டியாளரான குஷால் டோவாரியை விட முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லாஸ்பேட்டை தொகுதியில் என். ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சிவக்கொழுந்து வெற்றி.

என்.ஆர். காங்கிரஸ் - சிவக்கொழுந்து-10,578

காங்கிரஸ் - வைத்தியநாதன்-9161

தவெக - சாமிநாதன்-5647

நாதக - ஜெயசித்ரா-433

சிபிஎம் - ராஜாங்கம்-301..

1417 வாக்கு வித்தியாசத்தில் சிவக்கொழுந்து வெற்றி.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில் நெல்லை, திருச்சி, கோவையில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது.

சைதாப்பேட்டை தொகுதியில் 9 ஆம் சுற்று நிலவரம்: தவெக முன்னிலை

திமுக - 2503

அதிமுக - 682

தவெக- 4163

நாதக- 239

நோட்டா - 32

மொத்தம் 7678 வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக 1,660 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

அஸ்ஸாமின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா, அகில் கோகோய், லுரின்ஜோதி கோகோய், ஜகதீஷ் புயான் மற்றும் ராஜன் கோஹைன் உள்ளிட்ட அனைவரும், தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளதாக வெளியான தேர்தல் ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.

திமுக சார்பில் போட்டியிட்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பின்னடைவை சந்தித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வரும் நிலையில் அதன் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் தொகுதியில் 6ஆவது சுற்றில் தவெக முன்னிலை

திமுக-17232

அதிமுக-15154

தவெக-18945

நாம் தமிழர் கட்சி-962

1713 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலை

மதுரை மத்தி 5 சுற்று முடிவில்: தவெக 9,527 வாக்குகள் முன்னிலை

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் - திமுக - 10899

சுந்தர் சி - புநீக- 10283

பதுருதீன் - தவெக - 20426

அப்துல் ஹக்கீம் - நாதக -1873

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி 4ஆவது சுற்று முடிவில், 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் வைரமுத்து இரண்டாமிடத்திலும், தவெக வேட்பாளர் சிந்தாமணி மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்று முடிவிலும் மு.க. ஸ்டாலின் பின்னடைவு

ஜலுக்பரி தொகுதியில் ஹிமந்த பிஸ்வ சர்மா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார்.

11 மணி நிலவரப்படி இரண்டாவது சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹிமந்த பிஸ்வ சர்மா 1,1821 வாக்குகளும், 7,748 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளார்.

லால்குடியில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் மார்ட்டின் முன்னிலை

பூந்தமல்லி தொகுதியில் 3 ஆவது சுற்றில் தவெக முன்னிலை

திமுக-10627

அமமுக-6299

நாம் தமிழர் கட்சி-1000

தவெக-19547

காரைக்கால்

நெடுங்காடு (தனி) தொகுதி முதல் சுற்றில் - வி.விக்னேஸ்வரன் (சுயேச்சை) என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் சந்திர பிரியங்காவைக் காட்டிலும் 1060 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

காரைக்கால் வடக்கு முதல் சுற்றில் - பி.ஆர்.என். திருமுருகன் (என்.ஆர். காங்கிரஸ்) 2052 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம். ரஞ்சித்தைக் காட்டிலும் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

விஜய் - 12523

திமுக இனிகோ இருதயராஜ் - 7237

அதிமுக - 3755

தவெக தலைவர் விஜய், திமுக வேட்பாளரை விட 5286 வாக்குகள் முன்னிலை.

Summary

திருப்பரங்குன்றம் தொகுதி - சுற்று 2 முடிவு

த.வெ.க முன்னிலை

திமுக - 2802

அதிமுக - 1842

த.வெ.க - 3487

நாதக - 557

அஇபுதமமக - 29

நோட்டா - 44

அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. காலை 10.25 மணி நிலவரப்படி, என்டிஏ 88 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழ்நாட்டில் 34 அமைச்சர்களில் 31 அமைச்சர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 100 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ள நிலையில் விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி,

அஸ்ஸாம் மாநிலத்தில் 24 இடங்களில் பாஜகவும் 5 இடங்களில் காங்கிரஸும் முன்னிலை.

கேரளத்தில் 42 இடங்களில் காங்கிரஸும் 21 இடங்களில் இடதுசாரிகளும் முன்னிலை.

புதுவையில் 4 இடங்களில் என். ஆர். காங்கிரஸ் 2 இடங்களில் காங்கிரஸ் கட்சி, அதிமுக ஒரு இடம், திமுக ஒரு இடத்தில் முன்னிலை.

தமிழ்நாட்டில் அதிமுக 20 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 18 இடங்களிலும் திமுக 9 இடங்களிலும் முன்னிலை.

மேற்கு வங்கத்தில் பாஜக 8 இடங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் 2 இடங்களிலும் முன்னிலை.

கோவை - சிங்காநல்லூர்

சுற்று 1

தவெக முன்னிலை

அதிமுக -2623

திமுக ( காங்கிரஸ்) -2096

தவெக - 3780

ஸ்ரீபெரும்புதூர் மூன்றாவது சுற்று நிலவரம்:

தவெக: 10905

அதிமுக: 8582

காங்கிரஸ்: 7557

நாதக: 832

நெல்லையில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் முன்னிலை

கோவை தெற்கு இரண்டாவது சுற்று

முன்னிலை நிலவரம்

திமுக ( செந்தில்பாலஜி ) - 7219

அதிமுக ( அம்மன் அர்சுணன் ) - 1883

தவெக ( செந்தில்குமார் ) - 6488

நாம் தமிழர் ( பேரறிவாளன் ) - 712

கோவை வடக்கு இரண்டாவது சுற்று

தவெக: 3,072

தி.மு.க.: 2,771

பாஜக: 2,894

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தவெக தற்போது வரை முன்னிலை.

காஞ்சிபுரத்தில் அதிமுக 300 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

வால்பாறை முதல் சுற்று முன்னிலை

திமுக ( ஆ. சுதாகர் ) - 3665

அதிமுக ( லட்சுமண சிங் ) - 2,431

தவெக ( ஸ்ரீதரன் ) - 3121

நாம் தமிழர் ( உமா தேவி )

அதிமுக வேட்பாளர் விஜயா: 3.396,

திமுக இரா லட்சுமணன்: 3077

த வெக மோகன்ராஜ்: 2862

நாதக அபிநயா: 133

விராலிமலை தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் 262 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இரண்டாமிடத்தில் தவெக வேட்பாளரும், மூன்றாமிடத்தில் திமுக வேட்பாளரும் உள்ளனர்.

அதிமுக - 3244

திமுக - 3049

தவெக - 3675

நாதக - 267

தவெக வேட்பாளர் பொன். சந்திரசேகர் முன்னிலை

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கு. செல்வப் பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு.

திருத்துறைப்பூண்டி தொகுதி (முதல் சுற்று)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 3694

தவெக - 2737

அதிமுக - 1954

மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய மூன்றிலும் தவெக முன்னிலை. அதிமுக மூன்றாம் இடம்.

கிருஷ்ணராயர் தொகுதி

கிருஷ்ணராயர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக - 3181, அதிமுக - 3619, தவெக - 2089, நாம் தமிழர் கட்சி - 297.

நன்னிலம் தொகுதி: முதல் சுற்று

அதிமுக - 4886

தவெக - 2723

எஸ்டிபிஐ - 2106

கன்னியாகுமரி: முதல் சுற்று:

திமுக முன்னிலை

ரெ.மகேஷ் (திமுக): 3751

என்.தளவாய்சுந்தரம் (அதிமுக): 2482

எஸ்.ஆர்.மாதவன் (த வெ.க.): 2446

மரிய ஜெனிபர் (நாம் தமிழர்): 639

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் முதல் சுற்றில் மூன்றில் தவெக முன்னிலை.

காஞ்சிபுரம் தொகுதி மட்டும் அதிமுக முன்னிலை

திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ். ரகுபதி முதல் சுற்றில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து இரண்டாமிடத்திலும், தவெக மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

தவெக-3793

திமுக -2948

அதிமுக -2456

நாம் தமிழர் கட்சி-555

குளித்தலை தொகுதியில் தவெக வேட்பாளர் 844 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

Summary

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் முதல் சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை.

திமுக- 3601

அதிமுக -3517

தவெக-2471

நாதக -199

முதல் சுற்று

அதிமுக: 3836

திமுக: 2657

தவெக: 2319

வித்தியாசம் 1181

திமுக - 3181

அதிமுக- 3689,

தவெக-2089,

நாம் தமிழர் கட்சி-438

அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 58 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் சுற்றில் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளரும் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமான சிவ.வீ. மெய்யநாதன் 160 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

தவெக இரண்டாமிடத்திலும், அதிமுக மூன்றாமிடத்திலும் உள்ளன.

முதலாம் சுற்று எண்ணிக்கை :

முன்னிலை கட்சி : அதிமுக

வாக்குகள் :1289

தாமரை. ராஜேந்திரன் (அதிமுக) :4506

லதா பாலசுப்ரமணியன் (திமுக):3217

சிவக்குமார் (தவெக): 2565

புகழேந்தி (நாம் தமிழர்) :335

விழுப்புரம் அதிமுக வேட்பாளர் விஜயா 3396

திமுக இரா லட்சுமணன் 3077

த வெக மோகன்ராஜ் -2862

நாதக அபிநயா -133

திமுக க.செல்வராஜ் 1726

அதிமுக பரமசிவம் 2791

தவெக ராம்குமார் 2805

கோபி செட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் உள்ளார்.

எஸ்.ஜெயக்குமார்(அதிமுக)-3388

தோப்பு வெங்கடாச்சலம்(திமுக) 2685

வி.பி.அருணாச்சலம்(தவெக) 2065

சி.லோகநாதன்(நாதக) 345

நோட்டா-32

வித்தியாசம்-703

விருத்தாசலம் தொகுதியில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் உள்ளார்.

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, அன்பில் மகேஸ், மா. சுப்பிரமணியன், கீதா ஜீவன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

கோவை தெற்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் உள்ளார்.

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.

முதல் சுற்று. 8.35. AM

2-வது சுற்று. 9.10. AM

3-வது சுற்று. 9.45. AM

4-வது சுற்று. 10.20. AM

5-வது சுற்று. 11.00 AM

6-வது சுற்று. 11.30 AM

7-வது சுற்று 12.05 PM

8-வது சுற்று 12.40 PM

9-வது சுற்று 01.15 PM

10-வது சுற்று 01.50 PM

11-வது சுற்று 02.20 PM

12-வது சுற்று 03.00 PM

13-வது சுற்று 03.20 PM

14-வது சுற்று 03.40 PM

15-வது சுற்று. 04.00 PM

மாலை 5.00 மணிக்குள் 234 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிடும்.

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் வாக்கே செல்லாத வாக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் முதல் தபால் வாக்கில் இரண்டு பேப்பர்களில் ஒரு பேப்பர் இல்லாத நிலையில் செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் தொகுதியில் முதல் ஓட்டு செல்லாத ஓட்டாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டுப்பாளையம் தொகுதி முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம் முன்னிலை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ் பி வேலுமணி முன்னிலை. இரண்டாவது இடத்தில் தவெக.

மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படும் திமுக

Summary

புதுச்சேரி 30 சட்டமன்ற தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின் முதல் கட்டமாக காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. முன்னதாக அனைத்து தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் காப்பு அறை சீல் அகற்றி , தபால் வாக்கு என்னும் பணியை தற்போது துவக்கி உள்ளனர்.

தபால் வாக்கு எண்ணிக்கை நிகழ்வில், பதிவு குறித்து முறையாக தெரிவிக்காததால் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக மற்றும் திமுக கடும் வாக்குவாதம்..

தமிழகம் முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

மின்னணு இயந்திரங்களில் வாக்குகளை எண்ணுவதற்கு 234 வாக்கு எண்ணும் அறைகள் தயாராக உள்ளன. தபால் வாக்குகளை எண்ண கூடுதலாக 240 அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், தேமுதிக, விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. நாம் தமிழா், தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக, அதிமுக, புதிதாக களம் கண்ட தவெக, நாம் தமிழா் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 234 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் அடுத்து யாா் ஆட்சியமைக்கப் போகிறாா்கள் என்கிற பெரும் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், 234 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை (மே 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.