புதுவை யூனியன் பிரதேசத்தில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களை உள்ளடக்கியது. இங்கு மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1964-ஆம் ஆண்டு முதலாவது சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. தற்போது 15-ஆவது சட்டப்பேரவைக்கான தோ்தல் கடந்த 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது.
புதுச்சேரியில் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணியில் புதிதாக லட்சிய ஜனநாயகக் கட்சி இணைந்தது. இந்தக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக 2 தொகுதிகளிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி 2 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக ஒரு தொகுதியிலும் களத்தில் உள்ளன.
போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் திமுகவை எதிர்த்து 5 தொகுதிகளிலும், விசிகவை எதிர்த்து ஒரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேர் போட்டியிட்டனர்.
இதைத் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும், மார்க்சிஸ்ட் இரண்டு தொகுதியிலும் தனியாகப் போட்டியிட்டனர்.
மேலும், இத்தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட்டு, 28 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் புதுச்சேரியைச் சேர்ந்த மக்கள் நேயம் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் தவெக களத்தில் போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் போட்டி கடுமையாக இருந்த நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், மீண்டும் என். ஆர். காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் வாய்ப்புள்ளது.
பிற்பகல் 4 மணி நிலவரப்படி, என்.ஆர். காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பாஜக 2 தொகுதிகளில் வெற்றியும் 3 தொகுதிகளில் முன்னிலையிலும் உள்ளன.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
Summary
The N.R. Congress is set to form the government once again in the Union Territory of Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது! மீண்டும் என்டிஏ ஆட்சி!

புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


