தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

1.50 கோடி வாக்குகளைக் கடந்து தவெக சாதனை! 2-ம் இடத்தில் யார்?

1.50 கோடி வாக்குகளைக் கடந்தது தவெக பெற்ற வாக்குகள், அதன் வெற்றி நிலவரம் எப்படிப்பட்டது என்பது பற்றி..

News image

தவெக தலைவர் விஜய் - ENS

Updated On :4 மே 2026, 3:10 pm IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் 1.50 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் இரண்டாம் இடத்தில் 1 கோடி வாக்குகளுடன் திமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.

5 மணி நிலவரப்படி எண்ணப்பட்ட வாக்குகளில் தவெக 1.50 கோடி வாக்குகளையும் திமுக மட்டும் 1 கோடி வாக்குகளும் அதிமுக 85 லட்சம் வாக்குகளையும் பெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டில் வாக்குகள் எண்ணப்பட்டு மாலை 5 மணி நிலவரப்படி விஜய்யின் தவெக 106 இடங்களிலும் திமுக 76 இடங்களிலும் அதிமுக 52 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 35 சதவிகித வாக்குகளை தவெக பெற்றிருக்கிறது என்கின்றன தரவுகள்.

2021-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளைப் பெற்றிருந்தது. வரலாற்றில் முக்கிய நிகழ்வாக புதிய கட்சியான தவெக இதுவரை 1.09 கோடி வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிகளின் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் சரிபாதிக்கும் மேலான வாக்குகளை தற்போது தவெக பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 1977-இல் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் அதிமுக தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையிலேயே 33.5 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்ததே இதுவரை அதிகபட்சமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தவெக வீழ்த்தியிருக்கிறது.

தமிழ்நாட்டின் நகர்புறங்களில் உள்ள 69 தொகுதிகளில் 55 தொகுதிகளில் தவெக முன்னிலையில் உள்ளது. திமுக வெறும் 8 தொகுதிகளிலும் அதிமுக வெறும் 6 தொகுதிகளிலும் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

அதுபோல, தமிழகத்தின் கிராமங்களை உள்ளடக்கிய 165 ஊரகத் தொகுதிகளில் 60 தொகுதிகளில் திமுகவும் 58 தொகுதிகளில் அதிமுகவும் 47 தொகுதிகளில் தவெகவும் முன்னிலையில் உள்ளது.

பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்திருந்த நிலையில், தவெக முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

About the votes received by TVK, which crossed one crore votes, and how its victory unfolded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.