தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தவெக முன்னிலையில் இருந்தாலும் 110 தொகுதிகள் தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது தமிழ்நாட்டில் பகல் 12.30 மணி நிலவரப்படி எண்ணப்பட்டிருப்பது வெறும் 30% வாக்குகள் மட்டுமே. மொத்தம் பதிவான வாக்குகளில் 1.49 கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. எண்ணப்பட வேண்டிய 4.88 கோடி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதாவது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதால், தேர்தல் முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், 110 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள், அதிகபட்சமாக 5000 வாக்குகளுக்கும் குறைவான வாக்குகளில்தான் முன்னிலையில் இருக்கிறார்கள்.
உதாரணமாக கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 5 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
உளுந்தூர்பேட்டையில் 38 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது.
சிதம்பரம் தொகுதியில் 42 வாக்குகள் வித்தியாசத்தில் மதஜ முன்னிலை வகிக்கிறது.
அருப்புக்கோட்டையில் 501 வாக்குகள் வித்தியாசத்தில் கேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
திருவெறும்பூரில் 19 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக முன்னிலையில் உள்ளது.
27 தொகுதிகளில் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை நிலவரம் அமைந்துளள்து.
சோழவந்தானில் 15 வாக்குகள் வித்தியாசத்திலும் நாமக்கல் தொகுதியில் 50 வாக்குகள் வித்தியாசத்திலும் போடியில் 173 வாக்குகள் வித்தியாசத்தில் பன்னீர்செல்வம் முன்னிலையில் உள்ளார்.
இதுபோன்று இரட்டை இலக்க எண்களின் வித்தியாசத்தில் இருக்கும் 110 தொகுதிகள் வெற்றி வாய்ப்பை யாருக்கு வேண்டுமானாலும் பரிசளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
Summary
There are 110 constituencies that could change the results of the Tamil Nadu elections 2026.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி நிலையங்களை அரசியல் களமாக மாற்றும் முயற்சியை தவெக கைவிட வலியுறுத்தல்

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


