திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று(வியாழக்கிழமை) நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் நடவடிக்கையில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும் மதிமுகவுக்கு 4 இடங்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சிக்கு தலா இரு இடங்களும் கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.
விசிக, தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் திமுக குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஆனால் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க மநீம கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓரிரு நாள்களில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் என்று கூறப்படுகிறது.
Summary
seat sharing: DMK- Makkal needhi maiam discussion today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

விருப்ப மனு தொகையை திரும்பப் பெறலாம்: மநீம

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு கையொப்பம்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


