சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்காக வழங்கப்பட்ட ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் 2 சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்த மக்கள் நீதி மய்யம், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக கூட்டணிக்கு நிபந்தனையின்றி ஆதரவு தருவோம், தேர்தலில் போட்டியிடவில்லை என்று கமல் தெரிவித்திருந்தார்.
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகம் செய்யப்பட்டது. அதில், ஒரு விருப்ப மனுவுக்கு கட்டணமாக ரூ.50,000 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்த நிர்வாகிகள், நேர்காணலுக்கு அழைப்பார்கள் என காத்திருந்திருந்தனர்.
ஆனால், இந்த தேர்தலில் போட்டியில்லை என்று மார்ச் 23 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் திடீரென தெரிவித்ததால், விருப்ப மனு அளித்திருந்த நிர்வாகிகள், ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
சுமார் 60 பேர் வரை விருப்பமனு அளித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், கட்சிக்கு வழங்கப்பட்ட பணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டதாகவும், இதனால் பணம் யாருக்கும் திருப்பி வழங்கபட மாட்டாது என்றும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், விருப்ப மனுவுக்கு செலுத்திய ரூ. 50,000-ஐ வழங்கியிருந்த நிர்வாகிகள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும், இன்றுமுதல் (ஏப்.8) வருகிற ஏப். 16 ஆம் தேதிக்குள் கட்சி தலைமை அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தலைமை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
Makkal Needhi Maiam has announced that the ₹50,000 paid as an application fee to contest the Assembly elections may be reclaimed.
இதையும் படிக்க... தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்

விருப்ப மனுவுக்கு ரூ. 50,000! கமலிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்!!

பேரவைத் தேர்தலில் போட்டியில்லை என்று மக்கள் நீதி மய்யம் அறிவித்திருப்பது குறித்து...வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
தேர்தலில் மநீம போட்டியிடவில்லை! - கமல்ஹாசன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
