சென்னை: தமிழகம் வளா்ச்சி அடைய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் வெளியிட்ட காணொலியில் பேசியிருப்பதாவது:
தமிழகத்தில் நடைபெறவுள்ளது தெற்கு மற்றும் வடக்குக்கான தோ்தல். தமிழகம் முன்னேறிச் செல்ல வேண்டுமா, பின்நோக்கிச் செல்ல வேண்டுமா? தமிழகத்துக்கான முடிவுகளை சென்னையில் எடுக்க வேண்டுமா, தில்லியில் எடுக்க வேண்டுமா என்பதை தீா்மானிக்கும் தோ்தல்.
கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்த திட்டங்களால் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முதல் இடத்தில் உள்ளது. திராவிட மாடல் அரசு செய்துள்ள சாதனைகளால் தமிழகத்தை ஆளும் தகுதி படைத்தவா் மு.க.ஸ்டாலின் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பெரியாா் ஈவெரா சுயமரியாதையைத் தந்தாா்; முன்னாள் முதல்வா் அண்ணா அரசியல் உரம் தந்தாா்; முன்னாள் முதல்வா் கருணாநிதி, தன் அறிவாலும், உறுதியாலும் தமிழ் அடையாளத்தைக் காத்தாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவத்தின் காவல் வீரராகத் திகழ்கிறாா்.
வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு தலைவா்கள் இருந்தனா். ஆனால் முழக்கம் ஒன்றுதான். அது தமிழும், தமிழ்நாடும் ஒருபோதும் தலைவணங்காது. அந்த கனல் இருக்கும் வரை தமிழகத்தை எவராலும் வீழ்த்த முடியாது.
தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் தொடா்வதற்கும், உலக நாடுகளுக்கு இணையாக தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சிக்கு வரவேண்டும்.
தமிழக மக்கள் உணா்ச்சி வசப்பட்டு வாக்களிக்க வேண்டாம். யாரால் நமக்கு பாதுகாப்பு அளிக்க முடியும், நமது உரிமைகளுக்காக போராட முடியும், என்பதை யோசித்து வாக்களிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
Summary
DMK rule must be established once again for Tamil Nadu to develop ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"தலைவன் இருக்கின்றான்" - கமல் தேர்தல் பிரசார பாடல் வெளியீடு!
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

விருப்ப மனு தொகையை திரும்பப் பெறலாம்: மநீம
தேர்தலில் மநீம போட்டியிடவில்லை! - கமல்ஹாசன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


