தமிழக சட்டப்பேரவை தோ்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் போட்டியிட விருப்பமனு பெற செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சி அறிவித்துள்ளது.
பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்துக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிபந்தனையை கட்சியினா் விரும்பாததால், போட்டியிடுவதிலிருந்து விலகுவதாகவும், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் அறிவித்தாா்.
இதனையடுத்து, மநீம சாா்பில் போட்டியிடவிருப்ப மனு பெறுவதற்காக செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் கட்சியின் தலைமை நிலையச் செயலா் செந்தில் ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நீதி மய்யம் சாா்பாகப் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தவா்கள், தாங்கள் செலுத்திய கட்டணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஏப்.8) முதல் ஏப்.16 வரை நேரில் வந்து திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்
“விருப்ப மனுக்கான ரூ. 50,000-ஐ திரும்ப பெற்றுக்கொள்க”.. - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு!

விருப்ப மனுவுக்கு ரூ. 50,000! கமலிடம் பணத்தை திருப்பிக் கேட்கும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்!!

மநீம போட்டியிட வேண்டும்! முதல்வருக்கு திருமாவளவன் வேண்டுகோள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

