தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யால் இன்று தொடக்கிவைக்கப்பட்ட புதிய அரசுப் பேருந்துகளில் ’தமிழ்நாடு’ என்ற பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளில் ‘அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், தமிழ்நாடு என்ற பெயரைச் சேர்த்து ’தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ என பேருந்துகளின் கண்ணாடியில் அச்சிடுமாறு, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சி அமைந்துள்ள நிலையில், இன்று முதல்முறையாக 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை தொடக்கிவைக்கப்பட்டது.
முதல்வர் விஜய்யால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29 ஏ என்ற மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
Summary
'Tamil Nadu' to be added back to government buses!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!

திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு!
தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

முதல்வர் விஜய் தலைமையில் 7 பட்டியலின அமைச்சர்கள்! இதுவரை இல்லாத அதிகபட்சம்!!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை


