தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
சென்னை, கோவை உள்பட 6 கோட்டங்களுக்காக 164 டீசல் பேருந்துகள், 136 சிஎன்ஜி பேருந்துகள் உள்பட 300 புதிய அரசுப் பேருந்துகள் வாங்கப்பட்டன.
இந்த பேருந்துகள் அனைத்தும் தொடக்க விழாவுக்காக சில நாள்களுக்கு முன்னதாகவே சென்னை கொண்டுவரப்பட்டன. ஆனால், நிர்வாகக் காரணங்களால் தொடக்க விழா நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் விஜய் தொடக்கிவைத்தார்.
தொடர்ந்து, புதிதாக தொடங்கப்பட்ட திருவல்லிக்கேணியில் இருந்து பெரம்பூர் செல்லும் 29 ஏ என்ற மாநகரப் பேருந்தில் முதல்வர் விஜய் பயணித்தார்.
தலைமைச் செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை அந்த பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Summary
Chief Minister Vijay flagged off the services of 300 government buses and took a ride on one!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய்
தவெக அரசு 40 நாள்களில் செய்தது என்ன? சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர் விஜய்!

முதல்வராக முதல் அரசு விழா! அணிவகுப்பு மரியாதையை ஏற்ற முதல்வர் விஜய்!

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK
தினமணி செய்திச் சேவை

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை


