பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவெடுத்துவிட்டது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவைப் பொறுத்தவரையில், என்ன நடந்தது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.
“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், 2023”-ஐ மக்கள்தொகைக் கணக்கெடுப்பும், தொகுதி மறுவரையறையுமின்றி நிறைவேற்ற முடியாது என்பதை உறுதிசெய்யவே, மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நேரத்தில் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டினார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு இப்போதே உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. உள்ளாட்சிகளில் மகளிர் இடஒதுக்கீட்டை முன்னோடியாகச் செயல்படுத்தியது தமிழ்நாடுதான்.
எங்களுடைய கவலை என்பது, தென்மாநிலங்களைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா இத்துடன் உள்நோக்கத்துடன் இணைக்கப்பட்டதுதான். மறுவரையறை என்பது தென்மாநிலங்கள் பாதிப்படையாத வகையில் கவனத்தோடு செய்யப்பட வேண்டியது. அதனால்தான், அனைவரோடும் கலந்து பேசி, கருத்தொற்றுமையுடன் இதனைச் செய்யக் கோரினோம்.
குறைந்தபட்சம், தொகுதி மறுவரையறை மசோதாவையும் மகளிர் இடஒதுக்கீட்டையும் பிரித்திருக்கலாம். ஆனால், பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய அரசு அதனைச் செய்யவில்லை.
இதேநேரத்தில், அவர்கள் மாநிலங்களுடன் தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசித்திருக்கலாம். ஆனால், அதனையும் செய்யவில்லை.
நாம் தெரிவித்த கவலைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதனையும் செய்யவில்லை.
இது நீதியல்ல;
இது உண்மையான நோக்கமல்ல;
இது வெறும் காட்சிப்பிழை!
இதனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
இந்தியப் பெண்கள் வாக்கு வங்கி அல்ல. அவர்களும் பா.ஜ.க. நடத்தும் நாடகங்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உண்மை எளிமையானது: பா.ஜ.க. நினைத்திருந்தால் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அவர்கள் வழங்கக் கூடாது என முடிவெடுத்துவிட்டனர். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
Chief Minister Stalin has stated that the BJP has already decided not to provide reservation for women.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

பிரதமரை அச்சுறுத்துகிறாரா முதல்வர்? ஸ்டாலின் விடியோவுக்கு அண்ணாமலை பதில்!

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

