மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பை இந்தியா இழந்துள்ளது..

News image

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:13 pm IST

மகளிர் இடஒதுக்டு மசோதாவை காங்கிரஸ் கட்சி தடுத்ததன் மூலம், பெண் அதிகாரமளித்தலை நோக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பை இந்தியா இழந்திருப்பதாக ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

2029 ஆம் ஆண்டில் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதையும், மக்களவையின் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமையன்று மக்களவையில் தோல்வியடைநதது.

இந்த மசோதா மக்களவை - பேரவைகளில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டு வழங்க உத்தேசித்தது. மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர். வாக்களித்த 528 உறுப்பினர்களில், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற இந்த மசோதாவிற்கு 352 வாக்குகள் தேவைப்பட்டன.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தடுத்ததன் மூலம், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், பெண் அதிகாரமளித்தலை நோக்கிய இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றத்தைத் தடுத்துவிட்டதாக ஆந்திர முதல்வர் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

இது வெறும் அரசியல் நீதியான முட்டுக்கட்டை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சமமான பிரநிதித்துவத்தை பெறத் தகுதியுள்ள லட்சக்கணக்கான பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்த தேசம் இதை நினைவில் கொள்ளும் என்றும் கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையில், சட்டப்பேரவை அமைப்புகளில் பெண்களின் அதிகாரத்தை அதிகரிக்கும் ஒரு சிறந்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக ஜனசேனா கட்சியின் நிறுவனரும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருந்தால், பெண்களுக்கு உரிய மரியாதை கிடைத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Summary

Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu has said the Congress party blocking the Women's Reservation Bill had denied India a 'historic step towards women's empowerment'.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.