தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மக்களவையில் திமுக மூத்த எம்பி டி.ஆர். பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசிலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை மத்திய சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டவுடன், இதில் முன்மொழியப்பட்டுள்ள மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு காங்கிரஸ், திமுக, சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தொடர்ந்து, மக்களவையில் டி.ஆர். பாலு பேசியதாவது:
”மூன்று மசோதாக்களும் ஒன்றோடு ஒன்று இணைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூன்று மசோதாக்களையும் தனித்தனியாக தாக்கல் செய்ய அரசு முன்வரவில்லை. மூன்று மசோதாக்களையும் பிரித்து பார்ப்பதற்குகூட சிரமமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கிறது. ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யப்படுவதற்கான அவசியமில்லை. தொகுதி மறுவரையறைக்காக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டம் நடத்தியுள்ளார். நாங்கள் மகளிருக்கான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். தொகுதி மறுவரையறை செய்யாமல் தற்போதைய எண்ணிக்கையைக் கொண்டு உடனடியாக மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துங்கள்” எனத் தெரிவித்தார்.
Summary
No to Constituency Delimitation! Support for the 2023 Women's Reservation Bill! — T.R. Baalu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்

50 இல்லாவிட்டாலும் 33 வரவேற்கத்தக்கது! மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மாயாவதி ஆதரவு!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
