இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேற்கொண்ட பிரசாரத்தில், மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் சூப்பர் ஸ்டாராக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,000 ஆக உயர்த்தப்போகிறோம்.
இல்லத்தரசிகளுக்காக ரூ.8,000 கூப்பன் திட்டத்தையும் அமல்படுத்த இருக்கிறோம். ரூ.8,000 கூப்பன் தொகையை கொண்டு டிவி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தாத பம்புசெட்டை வாங்கி தரவிருக்கிறோம். சொன்ன திட்டங்கள் அனைத்தையும் செய்வேன், நான் கலைஞரின் மகன்.
அனைவருக்கும் செல்போன் என்பது உள்ளிட்ட பல் திட்டங்களை அதிமுக நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால், நாம என்ன படிக்க வேண்டும் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியாது.
தமிழ்நாட்டுக்கு பிரசாரத்துக்கு வரும் பிரதமர், உள்துறை அமைச்சர் மும்மொழி கொள்கையை அமல்படுத்துவோம் என கூறுவார்களா?. அதிமுக - பாஜகவால் அமல்படுத்தப்பட்ட திட்டங்களை கூற முடியவில்லை. திமுக அரசின் சாதனைகளை நெஞ்சை நிமிர்த்தி கூற முடியும். அதிமுக, பாஜக கூட்டணியில் முரண்பாடுகள் உள்ளன.
திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி. இவ்வாறு குறிப்பிட்டார்.
Summary
Chief Minister Stalin has stated that Edappadi K. Palaniswami (EPS) must be given further defeats.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்
திமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இந்தியாவிலேயே சிறந்த தொகுதி கொளத்தூர் : உதயநிதி பிரசாரம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


