ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியீடு!

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

News image

மதுரை மத்திய தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் சுந்தர். சி.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:38 pm IST

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர். சியின் சொத்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி சனிக்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். இதையடுத்து வேட்பு மனுவில் அவரது சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், சுந்தர். சி பெயரில் ரூ.2.97 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும், மனைவி குஷ்பு பெயரில் ரூ.6.06 கோடி மதிப்பில் அசையும் சொத்துக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுந்தர். சியிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.20.82 கோடியாகவும், குஷ்புவிடம் உள்ள அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.16.79 கோடியாகவும் உள்ளன.

மேலும் சுந்தர்.சி பெயரில் ரூ.4.12 கோடி கடனும், குஷ்பு பெயரில் ரூ.2.74 கோடி கடனும் உள்ளன. சுந்தர்.சியிடம் கையிருப்பாக உள்ள தொகை - ரூ.50,600. குஷ்புவிடம் கையிருப்பாக உள்ள தொகை - ரூ.30,000 ஆகும்.

சுந்தர்.சியிடம் 3 கார்களும், குஷ்புவிடம் ஒரு காரும் உள்ளது. குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி நிறுத்தப்பட்டுள்ளார்.

அவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் களமிறங்குகிறார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்கும் அவர், மனைவி குஷ்புவுடன் சென்று மதுரை மத்திய தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

Summary

The asset details of Sundar C, who is contesting in the Madurai Central constituency, have been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.