கேரளத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சங்களை மாநிலம் தொடும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
கேரள மாவட்டம், பத்தனம்திட்டாவில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "கேரளத்தில் மே 4 ஆம் தேதியில் பல ஆண்டுகால தவறான ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசை மாநிலத்திலிருந்து வழியனுப்புவதற்கான காலம் தொடங்கி விட்டது. கேரளத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவிருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்த சமூகத்தினர்தான் அதிகளவில் உள்ளனர். அங்கே ஒரு மாநிலத்தைத் தவிர, 7 மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி செய்கிறது. கிறிஸ்தவ சமூகத்தினர் இருக்கும் கோவாவிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி - பிடிஐ
பாஜக ஆட்சியில் வளர்ச்சியின் உச்சங்களைத் தொட்டு வரும் கோவாபோல, கேரளத்திலும் ஆட்சியமைந்தா, கேரளமும் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொடும்.
இங்குள்ள சபரிமலை ரயில்வே திட்டத்தை மாநில அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆனால், சபரிமலைக்கு நேரடி இணைப்பை மேம்படுத்துவதுடன், உள்ளூர் வர்த்தகத்துக்கு புதிய வேகமும் கிடைக்கும். இதனால், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி வரும்போது, இதுபோன்ற அனைத்துத் தடைகளும் நீக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Summary
Keralam Will Reach New Heights Under BJP Rule: PM Modi Assures
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி

சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!

பிரதமர் மோடி சென்னை வருகை: பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மறுப்பு?
வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி! தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
