சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. அதிமுக தலைமயிலான கூட்டணியில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று(ஏப். 3) வெளியானது.
மயிலாப்பூரில் தமிழிசை சௌந்தரராஜன், அவினாசியில் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், சாத்தூரில் நயினார் நாகேந்திரன், விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதாரணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போட்டியிடவில்லை.
பிரதமர் மோடி புதுச்சேரியில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட பின்னர் நேற்று இரவு சென்னையில் தங்கினார்.
தொடர்ந்து இன்று(ஏப். 4) காலை சென்னையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மையக்குழு கூட்டம் சென்னை தனியார் விடுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மையக்குழுவைச் சேர்ந்த 18 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். பியூஷ் கோயல், எல். முருகன், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தேர்தல் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல 27 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களும் பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.
Summary
PM Modi participates BJP Core committee meeting held in chennai
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழக பாஜக செயல்வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி
பாஜக ஆட்சியில் கேரளம் புதிய உச்சங்களைத் தொடும்: பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி சென்னை வருகை: பாஜக நிர்வாகிகளைச் சந்திக்க மறுப்பு?
வேட்பாளர்கள் அறிவிப்பில் இழுபறி! தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பை ரத்து செய்த பிரதமர் மோடி!!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



