மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட விடியோவில் பிரதமரை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதாக முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 273 மக்களவை இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 816-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையொட்டி, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக ஏப்.16 முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமர்வு நடைபெறவுள்ளது.
தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்து விடியோ ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோவில், அவர் பேசிய மொழி நமது நாட்டின் பிரதமரையே பகிரங்கமாக மிரட்டும் வகையில் இருந்தது. தமிழகம் 1960-களுக்கு திரும்பும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உரிய இந்த இடஒதுக்கீடு மசோதா, 1996 ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருந்தது என்பதைத் தமிழகத்தின் முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். 2010 ஆம் ஆண்டில், இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை. ஆகையால், அனைவரையும் ஒன்றிணைக்க பிரதமர் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 2023 செப்டம்பரில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது மக்கள் தொகையின் அடிப்படையில் அதிகரிக்கப்படும் என்று நாங்கள் எங்குமே கூறவில்லை” எனத் தெரிவித்தார்.
Summary
Former Tamil Nadu BJP President Annamalai has responded to the video released by Tamil Nadu Chief Minister Stalin regarding the Women's Reservation Bill.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ராகுல் கூட்டத்துக்கு அழைப்பில்லை; அதனால் செல்வப்பெருந்தகை நாடகமாடுகிறார்! - அண்ணாமலை
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

புதுவையில் ராகுல் காந்தி - ஸ்டாலின் சந்திக்காதது ஏன்?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

