மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காமன்வெல்த் கபடி: இறுதிக்கு முன்னேறியது இந்தியா

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்திய மகளிா் அணி தனது அரையிறுதியில் 39-14 என இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

இந்திய மகளிா் அணி

Published On :31 அக்டோபர் 2026, 7:07 am IST

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பின் 8-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, இந்திய மகளிா் அணி தனது அரையிறுதியில் 39-14 என இலங்கையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. அதில் உகாண்டாவை சனிக்கிழமை (அக். 31) சந்திக்கிறது.

முன்னதாக, இந்த அரையிறுதியில், இந்திய அணியில் சாக்ஷி 8 ரைடு புள்ளிகள், 3 டேக்கிள் புள்ளிகளுடன் 11 புள்ளிகள் எடுத்து முன்னிலை வகித்தாா். கேப்டன் நிதி சா்மா 2 போனஸ் புள்ளிகள் உள்பட 12 ரைடுகளில் 10 புள்ளிகளைச் சோ்த்தாா். ரித்து 4, சுமன் 3 புள்ளிகளைப் பெற்றுத் தந்தனா். இந்திய அணி 21 ரைடு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றதுடன், மூன்று முறை ’ஆல்-அவுட்’ செய்தது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக திலுக்ஷனா 5 போனஸ் புள்ளிகள் உள்பட 6 புள்ளிகளைப் பெற்றாா். பிரியவா்ணா ஒரு ’சூப்பா் டேக்கிள்’ செய்தாா்.

மற்றொரு அரையிறுதியில், உகாண்டா 23-21 என்ற புள்ளிகள் கணக்கில் கென்யாவை வென்றது. உகாண்டா அணியில் நகயோங்கோ ஷிரத், நல்வோகா நஹியா தலா 8 புள்ளிகள் எடுத்து அணியை வழிநடத்தினா். உகாண்டா அணி 17 ரைடு புள்ளிகள், 4 டேக்கிள் புள்ளிகளைப் பெற்றதுடன், ஒருமுறை ’ஆல்-அவுட்’ செய்தது.

இந்திய - உகாண்டா மோதும் இறுதி ஆட்டம் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு நடைபெறும். லீக் சுற்றில் இந்திய அணி 41-18 என்ற கணக்கில் உகாண்டாவை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.