மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கபடியில் 2 பதக்கங்கள் உறுதி: அபார வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறியது ஆடவர் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் கபடி அணி இறுதிக்கு முன்னேறியது குறித்து...

The men's team advanced to the final with a spectacular victory.

அபார வெற்றியுடன் இறுதிக்கு முன்னேறியது ஆடவர் அணி - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :25 செப்டம்பர் 2026, 2:51 pm IST

ஆசிய விளையாட்டுப் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய ஆடவர் கபடி அணி தாய்லாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

ஏற்கெனவே, தோல்வியே காணாமல் இந்திய மகளிர் கபடி அணியும் இறுதிப் போட்டியில் முன்னேறியுள்ளதால், இந்தப் பிரிவில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தத் தொடரில் ஆடவருக்கான கபடி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவும் தாய்லாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி 66-28 என்ற புள்ளிகள் கணக்கில் அபாரமான வெற்றியைப் பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி எதிரணியை ஆட்டமிழக்க செய்வதன் மூலம் 43 புள்ளிகளும் போனஸ் மூலம் 15 புள்ளிகளும் 4 முறை ஆல் அவுட் செய்ததன் மூலமாக 8 புள்ளிகளுமாக மொத்தமாக 66 புள்ளிகள் கிடைத்தன.

1990 முதல் ஆசிய போட்டியில் விளையாடி வரும் இந்திய ஆடவர் கபடி அணி இதுவரை 8 தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆடவருக்கான இறுதிப் போட்டி நாளை (செப்.26) இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதுவரை இந்திய அணி 19 பதக்கங்களை வென்றுள்ளன. கபடியில் இரண்டு பதக்கங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

Summary

Indians rule kabaddi: Both men's and women's enter Asian Games finals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.