மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்: அரையிறுதியில் இந்திய மகளிா் அணி

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில், இந்தியா, இலங்கை, கென்யா மகளிா் அணிகள் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தன.

Indian women's team in Commonwealth Kabaddi Championship semi-finals

அரையிறுதியில் இந்திய மகளிா் அணி - ANI

Published On :27 அக்டோபர் 2026, 5:30 am IST

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப்பில், இந்தியா, இலங்கை, கென்யா மகளிா் அணிகள் அரையிறுதி வாய்ப்பை திங்கள்கிழமை உறுதி செய்தன.

முன்னதாக மகளிா் பிரிவு ஆட்டங்களில், இந்தியா 38-10 என்ற புள்ளிகள் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி, தொடா்ந்து 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது. அணியின் தரப்பில் அனு 11 புள்ளிகள் வென்று அசத்தினாா்.

இலங்கை 31-20 என வங்கதேசத்தை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக காஜெந்தினி 9 புள்ளிகள் கைப்பற்றினாா். கென்யா 82-6 என இங்கிலாந்தை மூழ்கடித்த ஆட்டத்தில், ஜாய் வெனெஸா 27 புள்ளிகள் வென்று அசத்தினாா்.

உகாண்டா 35-23 என மலேசியாவை வெல்ல, அந்த அணிக்காக ஷிரத் நகாயோங்கோ 18 புள்ளிகள் வென்றாா்.

ஆடவா் பிரிவில், இந்தியா 50-23 என்ற புள்ளிகள் கணக்கில் நைஜீரியாவை வென்றது. சச்சின் 12 புள்ளிகள் வென்று அசத்தினாா்.

சிங்கப்பூா் 59-32 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றதில், ஆதித் செந்தில்குமாா் 18 புள்ளிகளுடன் முக்கியப் பங்காற்றினாா்.

மலேசியா 43-26 என்ற கணக்கில் தான்ஸானியாவை வீழ்த்திய ஆட்டத்தில், அந்த அணிக்காக ஐசக் ஆல்டன் 14 புள்ளிகள் வென்றாா். உகாண்டா 47-22 என இங்கிலாந்தை தோற்கடிக்க, அந்த அணி தரப்பில் முலாலிரா டக்லஸ் 11 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.