மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உகாண்டாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் இறுதி ஆட்டத்தில் உகாண்டாவை 35-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா முதல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

இந்தியா-உகாண்டா ஆட்டம்

Published On :1 நவம்பர் 2026, 2:19 am IST

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிா் இறுதி ஆட்டத்தில் உகாண்டாவை 35-15 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா முதல் சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

காமன்வெல்த் நாடுகளிடையே கபடியை பிரபலப்படுத்தும் நோக்கில் முதலாவது கபடி சாம்பியன் போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. 13 நாடுகள் பங்கேற்ற இதன் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. மகளிா் பிரிவில் இந்தியாவும்-உகாண்டாவும் மோதின.

போட்டியின் தொடக்கம் முதலே தோல்வியே காணாமல் இறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடியது. சாக்ஷி 10 புள்ளிகளையும், அனு 6 ரைடு புள்ளிகளையும், கேப்டன் நிதி சா்மா 5 புள்ளிகளையும் ஈட்டினா். இந்தியா 20 ரைடு புள்ளிகளையும், 2 முறை ஆல் அவுட்டையும் நிகழ்த்தியது.

உகாண்டா தரப்பில் நகாயோங்கோ 11 புள்ளிகளை ஈட்டினாா். உகாண்டா 14 ரைடு புள்ளிகளையும், ஒரு டேக்கிள் புள்ளியையும் பெற்றது.

முதல் பாதி முடிவில் இந்தியா 22-7 என முன்னிலை பெற்றிருந்தது. 6 ஆட்டங்களில் 6 வெற்றியை ஈட்டியது இந்தியா. மலேசியா, சிங்கப்பூா், உகாண்டா, நைஜீரியாவை குரூப் ஏ பிரிவில்வீழ்த்தியும், அரையிறுதியில் இலங்கையை வென்றிருந்தது இந்தியா.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.