தாஷ்கன்ட்: உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யு 15 & 17) ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், யு-17 பிரிவில் இந்திய மகளிர் அரையிறுதிக்கு முன்னேறி 12 பதக்கங்களை வியாழக்கிழமை உறுதி செய்தனர்.
காலிறுதியில் 46 கிலோ பிரிவில் ராக்கி 5}0 என, சீன தைபே வீராங்கனையை வெல்ல, 48 கிலோ பிரிவில் குஷி "ஆர்எஸ்சி' முறையில் தென் கொரிய வீராங்கனையைச் சாய்த்தார்.
அதேபோல் 52 கிலோ பிரிவில் மம்தாவும் "ஆர்எஸ்சி' முறையில் ஜோர்டான் வீராங்கனையை வீழ்த்த, லக்ஷ்மி 54 கிலோ பிரிவில் ஆர்எஸ்சி முறையில் மங்கோலியாவையும், நவ்யா 57 கிலோ பிரிவில் 5-0 என சீன தைபேவையும் சாய்த்தனர்.
60 கிலோ பிரிவில் இஷிகா ஆர்எஸ்சி முறையில் மங்கோலியாவை தோற்கடிக்க, ஹர்னூர் 66 கிலோ பிரிவிலும், ஹிமான்ஷி 70 கிலோ பிரிவிலும் ஆர்எஸ்சி முறையில் சீன தைபே போட்டியாளர்களை தோற்கடித்தனர். 75 கிலோ பிரிவில் ஜோதி எதிர்கொண்ட துர்க்மெனிஸ்தான் போட்டியாளர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால், ஜோதி வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
80+ கிலோ பிரிவில் குர்சீரத் 4-0 என கஜகஸ்தான் போட்டியாளரை வெல்ல, ஒரே தோல்வியாக 50 கிலோ பிரிவில் ஓவி 2-3 என உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் தோற்றார். இதனிடையே ஆடவருக்கான 44-46 கிலோ பிரிவில் நரேந்திர குமார் நெல்லா "ஆர்எஸ்சி' முறையில் ஜோர்டன் வீரரை சாய்த்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய அணியினா் அபாரம்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆதித்யா அதிரடி வெற்றி: காலிறுதிக்கு தகுதி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

