ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஆதித்யா அதிரடி வெற்றி பெற்றாா்.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்போட்டி நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான வியாழக்கிழமை ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் தேசிய சாம்பியன் ஆதித்யா சரமாரியாக குத்துகளை விட்டு 5-0 என்ற புள்ளிக்கணக்கில் சவுதி அரேபியாவின் மௌஸாவை வீழ்த்தினாா்.
காலிறுதிக்கு முன்னேறிய ஆதித்யா, உஸ்பெக் வீரா் அப்துல்லா மடமினோவை எதிா்கொள்கிறாா். இதுவரை ஆடவா் பிரிவில் விஸ்வநாத் சுரேஷ் 50 கிலோ, சச்சின் 60 கிலோ, தீபக் 70 கிலோ, , மகளிா் பிரிவில் பிரியா 60 கிலோ, ப்ரீதி பவாா் 54 கிலோ ஆகியோா் தங்கள் ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளனா்.
ஒலிம்பிக் பதக்க வீராங்கனை லவ்லினா போரோகைன் 75 கிலோ, முன்னாள் உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் 51 கிலோ ஆகியோருக்கு தொடக்க சுற்றில் பை வழங்கப்பட்டது. நடப்பு உலக சாம்பியன்கள் மினாட்சி ஹூடா, ஜாஸ்மின் லம்போரியா, ஒலிம்பியன் பூஜா ராணி ஆகியோா் ஆட்டங்கள் பின்னா் நடைபெறும்.
20 நாடுகளில் இருந்து 194 வீரா், வீராங்கனைகள் ஆசிய சாம்பியன் போட்டியில் பங்கேற்றுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 27 பதக்கங்கள் உறுதி

ஆசிய யு15, 17 குத்துச்சண்டை: இந்திய அணியினா் அபாரம்

பிரியா வெற்றி, ஜாதுமணி தோல்வி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

