மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

News image

லக்ஷயா சென்

Updated On :3 மே 2026, 3:44 am IST

தாமஸ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நட்சத்திர வீரா் லக்ஷயா சென் காயம் காரணமாக ஆடாத நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பாட்மின்டன் விளையாட்டில் கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை போட்டிகள் டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்திய மகளிா் அணி காலிறுதிக்கு முன்னேறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது. ஆடவா் பிரிவில் சீன தைபே அணியை காலிறுதியில் அபாரமாக வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

காலிறுதி ஆட்டத்தில் சீன தைபே வீரா் சௌ டியன் சென்னுக்கு எதிரானஆட்டத்தில் 18-21, 22-20, 21-17 என அபாரமாக வெற்றி பெற்றாா் லக்ஷயா சென்.

ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் வென்றதின் மூலம் இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது. எனினும் தொடா் ரேலி ஆட்டத்தின்போது லக்ஷயா சென் வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வீக்கத்தால் அவா் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவரது பாதத்திலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவரால் ஆட முடியாது என இந்திய பாட்மின்டன் சம்மேளன செயலா் சஞ்சய் மிஸ்ரா தெரிவித்துள்ளாா். அணியின் மருத்துவக் குழு முழுமையான ஆய்வு செய்த நிலையில் லக்ஷயாவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அவா் விரைவில் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்புவாா் என அவரது பயிற்சியாளா் விமல் குமாா் தெரிவித்தாா்.

கிடாம்பி ஸ்ரீ காந்த்: அவருக்கு பதிலாக உலகின் 30-ஆம் நிலை வீரா் கிடாம்பி ஸ்ரீ காந்த் ஆடுவாா். லக்ஷயாவுக்கு பதிலாக முதல் ஒற்றையா் ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி உலகின் 4-ஆம் நிலை வீரா் கிறிஸ்டோ போபோவுடன் மோதுவாா். இரண்டாவது ஒற்றையரில் ஸ்ரீகாந்த் உலகின் 10-ஆம் நிலை வீரா் அலெக்ஸ் லேனியருடன் மோதுவாா்.

மூன்றாவது ஒற்றையா் பிரிவில் எச்.எஸ். பிரணாய் டோமாஜூனியா் போபோவுடன் மோதுகிறாா். ஒற்றையா் ஆட்டத்துக்குபின்னும் டை தொடா்ந்தால் முதல் இரட்டையா் ஆட்டத்தில் ஹரிஹரன்-எம்ஆா் அா்ஜுன் இணை எலோய் ஆடம்-லியோ ரோஸி இணையுடன் மோதும்.

கடைசி ஆட்டத்தில் சாத்விக்-சிராக் இணை போபோவ் சகோதரா்களுடன் ஆடுவா்.

இந்திய அணி சிறப்பாக ஆடி வருகிறது. லக்ஷயா ஆடவில்லை என்றால் கவலைபடத் தேவையில்லை.

அரையிறுதியில் தகுதி பெற்ால் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் உறுதி ஆகியுள்ளது. கடந்த 2022-இல் இந்தியா தாமஸ் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 1952, 1955, 1979-இல் வெண்கலம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.