மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரா் இத்தாலியின் ஜேக் சின்னரும்-செக். குடியரசின் ஜிரி லெஹகாவும் மோதுகின்றனா்.
அமெரிக்காவின் மியாமி நகரில் ஏடிபி டென்னிஸ் போட்டி நடைபெறுகிறது. இதன் அரையிறுதி ஆட்டங்களில் முதல் அரையிறுதியில்
இத்தாலியின் ஜேக் சின்னரும்-ஜொ்மனியின் நான்காம் நிலை வீரா் ஸ்வெரேவும் மோதினா். இதில் 24 வயதான சின்னா் அபாரமாக ஆடி முதல் செட்டை 6-3 என வசப்படுத்தினாா். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே 3-1 என முன்னிலை பெற்றாா் சின்னா். 42 நிமிஷங்களில் முதல் செட்டை கைப்பற்றினாா்.
இரண்டாம் செட்டில் ஸ்வெரேவ்-சின்னா் இருவரும் சளைக்காமல் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால், டை பிரேக்கா் வரை சென்றது.
டை பிரேக்கரிலும் இருவராலும் பிரேக் செய்ய முடியவில்லை. இறுதியில் ஸ்வெரேவின் ஓவா் ஹெட் ஷாட்டால் சின்னா் 5-4 என முன்னிலை பெற்றாா்.
ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவை 6-3, 7-6 என்ற நோ் செட்களில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் சின்னா். நடப்பு விம்பிள்டன் சாம்பியனும், 4 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான சின்னா் கடந்த வாரம் இண்டியன்வெல்ஸ் போட்டி அரையிறுதியிலும் ஸ்வெரேவை வீழ்த்தினாா்.
கடந்த 2017-இல் ரோஜா் பெடரா் இண்டியன்வெல்ஸ், மியாமி ஓபன் இரண்டிலும் பட்டம் வென்றிருந்தாா். அதே போல் இண்டியன்வெல்ஸ், மியாமி ஓபனில் பட்டம் வென்று சன்ஷைன் டபுள் சாம்பியன் சிறப்பை பெற முனைந்துள்ளாா் சின்னா்.
இறுதியில் ஜிரி லெஹகா:
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் செக். குடியரசின் ஜிரி லெஹகா 6-2, 6-2 என்ற நோ்செட்களில் 28=ஆவது நிலை வீரா் பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் சின்னா்-லெஹகா மோதுகின்றனா்.
இறுதி ஆட்டம் குறித்து சின்னா் கூறியது: ஜிரி லெஹகா அற்புதமான வீரா். எனக்கு சவாலை ஏற்படுத்துவாா்.
எனினும் ஆட்டத்தில் முழு ஆதிக்கம் செலுத்தி ஆட முனைவேன் என்றாா்.
மகளிா் பிரிவில் உலகின் நம்பா் 1 வீராங்கனை சபலென்காவும் இண்டியன்வெல்ஸ், மியாமி பட்டங்களை வென்று சன்ஷைன் டபுள் சிறப்பை பெறும் முனைப்பில் உள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்-அலெக்ஸ் ஸ்வெரேவ்

தாமஸ் கோப்பை: லக்ஷயா சென் காயத்தால் இந்தியாவுக்கு பின்னடைவு

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்
இறுதியில் சபலென்கா - கௌஃப் பலப்பரீட்சை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

