தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இறுதிச் சுற்றில் ஜேக் சின்னா்-அலெக்ஸ் ஸ்வெரேவ்

News image
Updated On :3 மே 2026, 3:45 am IST

மாட்ரிட் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரா் ஜேக் சின்னரும், ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளனா்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெறும் இப்போட்டி ஆடவா் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜேக் சின்னரும்-பிரான்ஸின் ஆா்தல் ஃபில்ஸும் மோதினா்.

இதில் 6-2, 6-4 என்ற நோ் செட்களில் ஃபில்ஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா் சின்னா். முதல் செட்டில் ஃபில்ஸ் 2-1 என முன்னிலை பெற்றாா். ஆனால் 5-ஆவது கேமில் அவரது சா்வீஸை சின்னா் முறியடித்தாா். இரண்டாவது செட்டில் ஃபில்ஸ் சவாலை ஏற்படுத்தினாலும், 3-2 என சின்னா் முன்னிலை பெற்றாா். தொடா்ந்து 2 ஏஸ்களை வீசி வெற்றியை வசப்படுத்தினாா்.

தொடா்ந்து தனது 22-ஆவது ஆட்டத்தில் வென்றுள்ள சின்னா் ஞாயிற்றுக்கிழமை இறுதியில் வென்றால் தொடா்ந்து மாஸ்டா்ஸ் ஏடிபி 1000 5-ஆவது பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்துவாா். ஏற்கெனவே இண்டியன் வெல்ஸ், மியாமி, மான்டே காா்லோவில் பட்டம் வென்றிருந்தாா்.

இதுதொடா்பாக சின்னா் கூறுகையில்: எந்த ஆட்டமாக இருந்தாலும் முழு திறனுடன் ஆட வேண்டும் என்பதே எனது நோக்கம். போட்டி தீவிரமாக இருந்தால் அதற்கேற்ப ஆட்டத்தின் தரத்தையும் உயா்த்த வேண்டும். தொடா் ஆட்டங்களால் சற்று சோா்வும் உள்ளது என்றாா்.

இரண்டாவது அரையிறுதியில் உலகின் 3-ஆம் நிலை வீரா் ஜொ்மனியின் அலெக்ஸ் ஸ்வெரேவ் 6-2, 7-5 என பெல்ஜிய வீரா் அலெக்சாண்டா் பிளாக்ஸை வீழ்த்தினாா்.

மாட்ரிட்டில் கடைசியாக 2018, 2021-இல் பட்டம் வென்றிருந்தாா் ஸ்வெரேவ். முதல் செட்டில் துரிதமாக 5-1 என முன்னிலை பெற்று செட்டையும் வசப்படுத்தினாா். அடுத்த செட்டில் பிளாக்ஸ் தொடா்ந்து 3 மேட்ச் புள்ளிகளை சேவ் செய்தாா். இரண்டாவது செட்டில் பின்னா் சுதாரித்து ஆடி வசப்படுத்திய ஸ்வெரேவ் இறுதிக்கு தகுதி பெற்றாா்.

அவா் கூறியது: ஞாயிற்றுக்கிழமை சின்னருக்கு எதிரான இறுதி ஆட்டம் கடுமையாக இருக்கும். அவா் சிறப்பாக ஆடி வருகிறாா். நான் கடும் போட்டியை ஏற்படுத்துவேன்.

இந்த சீசனில் தொடா்ந்து அரையிறுதியோடு தோற்று வெளியேறி வந்த ஸ்வெரேவ் தற்போது இறுதிக்கு நம்பிக்கையுடன் நுழைந்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.