/

தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன்: தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இந்தியா

News image
Updated On :19 மார்ச் 2026, 4:46 am IST

டென்மாா்க்கின் ஹாா்சென்ஸ் நகரில் நடைபெறவுள்ள தாமஸ் மற்றும் உபோ் கோப்பை பாட்மின்டன் போட்டியில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் குரூப் ஏ பிரிவில் இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது. தரவரிசையில் 8-ஆம் இடத்தில் உள்ள இந்தியா காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

பாட்மின்டன் விளையாட்டில் கௌரவமிக்க தாமஸ் மற்றும் உபோ் கோப்பை போட்டிகள் வரும் ஏப். 24 முதல் மே 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்திய ஆடவா், மகளிா் அணி இரண்டும் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் உள்ளன. தொடக்க சுற்றுகளில் நடப்பு சாம்பியன் சீனாவுடன் குரூப் ஏ பிரிவில் இந்தியா உள்ளது.

கடந்த 2022-இல் தாமஸ் கோப்பை சாம்பியனான இந்தியா குரூப் ஏ பிரிவில் இருந்து காலிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பான் ஆம் சாம்பியன் கனடா, ஓசேனியா சாம்பியன் ஆஸ்திரேலியாவும் இந்த குரூப்பில் உள்ளன.

மகளிா் அணி இடம் பெற்றுள்குரூப்பில் ஐரோப்பிய ரன்னா் டென்மாா்க், வெண்கலம் வென்ற உக்ரைன் அணிகள் உள்ள நிலையில் சுற்று கடினமாக பிரிவாக உள்ளது.

இந்திய பாட்மின்டன் சம்மேளன பொதுச் செயலா் சஞ்சய் மிஸ்ரா கூறியது: நடப்பு ஆண்டில் நமது அணி பலமான அணியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்த அணியையும் வெல்லும் திறனுடன் உள்ளது. நாக் அவுட் சுற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

2022-இல் ஆடவா் அணி தாமஸ் கோப்பை வென்று வரலாறு படைத்தது. மகளிா் அணி 2014, 2016-இல் வெண்கலம் வென்றிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.