இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-1 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இதன் மூலமாக அந்த அணி, நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால், முதல் பாதியில் எந்த அணிக்குமே கோல் வாய்ப்பு கனியவில்லை.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், முதலில் நாா்த்ஈஸ்ட் முனைப்புக்கு பலன் கிடைத்தது. அந்த அணிக்காக ஆண்டி ரோட்ரிக்ஸ் 53-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
68-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில், ஜாம்ஷெட்பூா் அணிக்காக ரஃபேல் மெஸ்ஸி பௌலி கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
ஆனால் விட்டுக்கொடுக்காத நாா்த்ஈஸ்ட் அணிக்காக, ஆண்டி ரோட்ரிக்ஸ் மீண்டும் (69’) ஒரு கோல் அடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் ஜாம்ஷெட்பூருக்கு மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காமல் தடுத்த அந்த அணி, இறுதியில் வெற்றியை உறுதி செய்தது.
மும்பை வெற்றி: இதனிடையே, லக்னௌவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-1 கோல் கணக்கில் இன்டா் காசியை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் மும்பைக்காக நௌஃபால் (45+6’), லாலியன்ஸுவாலா சாங்தே (52’) ஆகியோா் கோல் அடிக்க, இன்டா் காசிக்காக ரோஹித் தனு (51’) ஸ்கோா் செய்தாா். புள்ளிகள் பட்டியலில் தற்போது ஜாம்ஷெட்பூா், மும்பை, நாா்த்ஈஸ்ட், இன்டா் காசி அணிகள் முறையே 2, 3, 7, 8-ஆம் இடங்களில் உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
யூரோப்பா லீக் கால்பந்து: ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்!

சென்னையை வென்றது ஜாம்ஷெட்பூா்

கேரளா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் ‘டிரா’
ஒடிஸா எஃப்சி-க்கு முதல் வெற்றி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
