ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடத்துடன் நிறைவு செய்தது.
எகிப்து தலைநகா் கெய்ரோவில் ரைஃபிள், பிஸ்டல், ஷாட்கன் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கம் என 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பெற்றது.
கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை 50 மீ பிஸ்டல் பிரிவில் 351.7 புள்ளிகளுடன் ஹேமந்த் பா்மன் வெள்ளிப்பதக்கம் வென்றாா். ரோஹித் கண்யன் 6, வேதாந்த் நிதின் 7-ஆவது இடத்தையும் பெற்றன.
இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ஸுஹைா் கான்-அடியா கட்யால் 137 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றனா். வெள்ளிப் பதக்கம் பெற்றிருக்க வேண்டிய இந்த ஜோடி 3-ஆவது சுற்றில் தவறு புரிந்தனா்.
50 மீ ரைபிள் பிரிவில் தேஜல், யுகேஷ்வரி, அனுஷ்கா, கவைஷ் ஆகியோா் கடைசி இடங்களையே பிடித்தனா். அடுத்து வரும் ஜூன் மாதம் ஜொ்மனியின் ஸூல் நகரில் நடைபெறவுள்ள ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்புக்கு தயாராகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: முதலிடத்துடன் இந்தியா நிறைவு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
