எகிப்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியா முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
மொத்தமாக இந்தியா 5 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 16 பதக்கங்களுடன் முன்னிலை பெற, ரஷியா 12 பதக்கங்களுடன் 2}ஆம் இடமும், பிரான்ஸ் 6 பதக்கங்களுடன் 3}ஆம் இடமும் பிடித்தன.
முன்னதாக, போட்டியின் கடைசி நாளில் 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் ஜூனியர் ஆடவர் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஹேமந்த் பர்மன் 351.7 புள்ளிகளுடன் 2}ஆம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். கஜகஸ்தானின் ஆலெக் நோஸ்கோவ் தங்கமும் (355.6), உஸ்பெகிஸ்தானின் நிகிதா சோகோலோவ் வெண்கலமும் (341.2) பெற்றனர். களத்திலிருந்த இதர இந்தியர்களில், ரோஹித் கன்யன் (311.9), நிதின் வேதாந்த் (300.5) ஆகியோர் முறையே 6 மற்றும் 7}ஆம் இடங்களைப் பிடித்தனர்.
டிராப் கலப்பு அணிகள் ஜூனியர் பிரிவில், இந்தியாவின் ஜுஹைர் கான்/ஆத்யா கட்டியால் ஜோடி 19 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றது. ஹங்கேரி இணை தங்கமும் (32), ரஷிய கூட்டணி வெள்ளியும் (25) வென்றன.
50 மீட்டர் ரைஃபிள் புரோன் ஜூனியர் மகளிர் இறுதியில், இந்தியாவின் தேஜல் நதாவத் (610.2), அனுஷ்கா தாகுர் (607.4), குவாய்ஷ் சர்மா (602.1), யுகேஷ்வரி பைஸ் (598.4) ஆகியோர் முறையே 6, 8, 12, 13-ஆம் இடங்களைப் பிடித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியா முதலிடம்!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 வெள்ளி, 1 வெண்கலம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

