தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 3 பதக்கங்கள்

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் கிடைத்தன.

News image

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்

Updated On :22 ஏப்ரல் 2026, 5:56 am IST

எகிப்தில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்கள் செவ்வாய்க்கிழமை கிடைத்தன.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் ஜூனியா் ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் சிவா நா்வால் 241.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். மற்றொரு இந்தியரான சிராக் சா்மா 218.9 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றாா்.

உஸ்பெகிஸ்தானின் சோடிஜோன் அப்துல்லாயேவ் 240 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அபினவ் தேஷ்வால் 136.7 புள்ளிகளுடன் 7-ஆம் இடம் பிடித்தாா்.

10 மீட்டா் ஏா் ரைஃபில் ஜூனியா் மகளிா் இறுதிச்சுற்றில், இந்தியாவின் பனா புக்ரா 250.6 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றாா். பிரான்ஸின் ஆன்செலின் பிராக்மேன் தங்கத்தை தட்டிச் செல்ல (252), சக நாட்டவரான ஹெலெனா ஈகால் வெண்கலம் (228.5) பெற்றாா்.

களத்திலிருந்த இதர இந்தியா்களில், சாம்பவி ஷ்ரவன் 206.5 புள்ளிகளுடன் 4-ஆம் இடமும், அன்வில் ரத்தோட் 164.6 புள்ளிகளுடன் 6-ஆம் இடமும் பெற்ரனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.