தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிராக் இணைக்கு தங்கம்

News image

வன்ஷிகா, சிராக்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:56 am IST

எகிப்தில் நடைபெறும் ஜூனியா் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு சனிக்கிழமை கலப்பு அணிகள் பிரிவில் தங்கம், வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்தன.

10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், வன்ஷிகா சௌதரி, சிராக் சா்மா இணை 484.3 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது.

ரஷிய இணை வெள்ளி (467.6) பெற, மற்றொரு இந்திய ஜோடியான மோஹினி சிங், ராணா ஹிமான்ஷு 407.4 புள்ளிகளுடன் வெண்கலம் பெற்றனா்.

இதனிடையே, டிராப் ஆடவா் ஜூனியா் பிரிவு இறுதிச்சுற்றில், இந்தியாவின் ஜுஹைா் கான், யுகன் சக்திவேல் ஆகியோா் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8-ஆம் இடங்களைப் பிடித்தனா். அதிலேயே மகளிா் ஜூனியா் பிரிவில், பாவ்யா திரிபாதி 4 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பெற்றாா்.

போட்டியின் 5-ஆம் நாளான சனிக்கிழமை முடிவில், இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என 14 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடத்தில் நிலைக்கிறது. பிரான்ஸ் (6), ரஷியா (8) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.