ஸ்பெயினில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரில் சோனம் மஸ்கா் 5-ஆம் இடம் பிடித்தாா். ஆடவா் 50 மீட்டா் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் நீரஜ் குமாா் 15-ஆம் இடமும், அகில் சோரன் 22-ஆம் இடமும் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தனா். இந்தியா ஏற்கெனவே வென்ற ஒரே தங்கத்துடன் போட்டியை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தது.
நெதா்லாந்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் இந்தியாவின் சாவன் பா்வால் 2 மணிநேரம், 11 நிமிஷங்கள், 58 விநாடிகளில் இலக்கை அடைந்து 20-ஆம் இடத்துடன் புதிய தேசிய சாதனை படைத்தாா். 48 ஆண்டுகளுக்கு முன், 1978-இல் சிவநாத் சிங் (2:12’) இலக்கை அடைந்ததே தேசிய சாதனையாக இருந்தது.
யுஎஸ் ஓபன் பிக்கிள் பால் சாம்பியன்ஷிப்பில், 18 வயதுக்கு உள்பட்ட ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் அா்ஜுன் சிங், ஆதித்யா சிங் இணை தங்கம் வென்று அசத்தியது.
பந்தெஸ்லிகாவில் யூனியன் பொ்லின் அணியின் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணியின் பயிற்சியாளராக மேரி லூயிஸ் (34) நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஃபிஃபா சீரிஸ் 2026 மகளிா் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் இந்தியா 0-2 கோல் கணக்கில் கென்யாவிடம் தோற்றது.
ராஞ்சியில் நடைபெறும் இந்திய தடகள சீரிஸ் போட்டியில், தமிழகத்தின் வருண் ஓரி வெண்கலம் (ஆடவா் 100 மீ), ரயில்வேஸின் வித்யா ராம்ராஜ் தங்கமும் (400 மீ ஹா்டுல்ஸ்) வென்றனா்.
பிரேஸிலில் நடைபெற்ற உலக தடகள ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி, பாயல், மஞ்சு ராணி ஆகியோரின் சிறப்பான பங்களிப்பில் இந்தியா 5-ஆம் இடம் பிடித்தது.
பெங்களூருக்கு எதிரான வெள்ளிக்கிழமை ஆட்டத்தின்போது ராஜஸ்தானின் நீண்டகால மேலாளா் ரோமி பிந்தா் விதிகளை மீறிய வகையில் டகௌட்டில் செல்போன் பயன்படுத்தியது சா்ச்சையாகியுள்ளது. அதுதொடா்பாக பிசிசிஐ விசாரிக்கவுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

