மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விளையாட்டுச் செய்தித் துளிகள்...

News image

Center-Center-Chennai

Updated On :10 ஏப்ரல் 2026, 6:09 am IST

ஸ்பெயினில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் திவ்யா டி.எஸ்., கஜானன் கந்தாகலே, ரிதம் சங்வான் ஆகியோா் முறையே 4, 5, 7-ஆம் இடங்களைப் பிடித்தனா்.

பில்லீ ஜீன் கிங் கோப்பை மகளிா் டென்னிஸ் போட்டியில், இந்தோனேசியாவுக்கு எதிரான டையில் வைஷ்ணவி அத்கா், சஹஜா யமலபள்ளி ஆகியோா் தோல்வி காண, அந்த டையை இந்தியா இழந்தது.

ஆசிய யூத் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், யு-19 மகளிா், யு-15 ஆடவா், யு-15 மகளிா் ஆகிய 3 பிரிவுகளில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது.

ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான புதன்கிழமை (ஏப். 8) ஆட்டத்தில் பந்துவீச்சில் தாமதம் செய்ததாக, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம், 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

மான்டிகாா்லோ மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.