மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிஎஸ்கேவைத் தொடர்ந்து... முழுமையாக கலைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்கள் குழு!

சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.

lasith malinga

லாசித் மலிங்கா

Published On :29 அக்டோபர் 2026, 4:29 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் கடந்த சில சீசன்களாக மிகவும் சராசரியாக விளையாடி வருகின்றன.

அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீஃபன் பிளெமிங் விலகினார். அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். அதன் பின், சிஎஸ்கேவின் பயிற்சியாளர்கள் குழுவில் இடம்பெற்ற மற்ற பயிற்சியாளர்களும் அவர்களது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவும் முழுமையாக கலைக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மஹேலா ஜெயவர்த்தனே அந்த பொறுப்பிலிருந்து விலகிய நிலையில், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார்.

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களான லாசித் மலிங்கா மற்றும் பராஸ் மாம்ப்ரே அவர்களது பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஃபீல்டிங் பயிற்சியாளரான கார்ல் ஹாப்கின்சனும் அவரது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழுவிலிருந்து லாசித் மலிங்கா, பராஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் விலகுகின்றனர். இத்தனை சீசன்களாக அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வளர்ச்சிக்காக மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர். அவர்களது சிறப்பான பங்களிப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Following Chennai Super Kings, the coaching staff of the Mumbai Indians team has also been completely disbanded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.