தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமனம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்கள் பற்றி...

mi

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்கள் - X | Mumbai Indians

Published On :30 அக்டோபர் 2026, 11:30 am IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில சீசன்களாக மிகவும் சராசரியாக விளையாடி வருகின்றது.

அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே உள்பட அனைத்து பயிற்சியாளர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த கைரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, பந்துவீச்சுப் பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகன், ஃபீல்டிங் பயிற்சியாளராக டிகே திலீப், பந்துவீச்சு மேம்பாட்டு பயிற்சியாளராக தவால் குல்கர்னி ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் குழு முழுவதும் கலைக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Robin Uthappa appointed as Mumbai Indians' batting coach!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.