தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக பொறுப்பேற்க ரோஹித் சர்மா விருப்பம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

Published On :30 அக்டோபர் 2026, 4:36 pm IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்க நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த சில தொடர்களாக தொடர்ந்து சொதப்பி வருகிறது. அடுத்தாண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அணி நிர்வாகங்கள் அனைத்தும் அணியில் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்த்தனே உள்பட அனைத்து பயிற்சியாளர்களும் சமீபத்தில் விடுவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டைச் சேர்ந்த கைரன் பொல்லார்டும், பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, பந்துவீச்சுப் பயிற்சியாளராக மிட்செல் மெக்லெனகன், ஃபீல்டிங் பயிற்சியாளராக டிகே திலீப், பந்துவீச்சு மேம்பாட்டு பயிற்சியாளராக தவால் குல்கர்னி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

மும்பை அணியில் பயிற்சியாளர்கள் குழு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கேப்டனான ஹார்திக் பாண்டியாவை டிரேட் செய்யும் முயற்சியிலும் மும்பை அணி தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த ஆறு ஆண்டுகளாக கோப்பையை வெல்ல கடுமையாக முயற்சித்துவரும் மும்பை அணி, கடந்த தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 10 போட்டிகளில் தோல்வியடைந்தது.

ஹார்திக் பாண்டியாவிடமிருந்து கேப்டன் பொறுப்பை ரோஹித் ஏற்க வேண்டும் என மும்பை அணி விரும்பியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சூர்யகுமார் யாதவ் அல்லது ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோரில் ஒருவருக்கு தலைமைப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய முகமாக திலக் வர்மாவும் தலைமைப் பதவிக்கான போட்டியில் உள்ளார்.

இந்த நிலையில், ஐந்து முறை கோப்பையை வென்றுகொடுத்த ரோஹித் சர்மாவை அணி நிர்வாகம் நாடிய நிலையில், அவர் திலக் வர்மா பரிந்துரைத்ததாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் அவரையே தலைமையேற்க அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு ரோஹித் சர்மாவும் விருப்பம் தெரிவித்துள்ளாராம்.

ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து செல்லும் முன்பே ரோஹித்திடம் தெரிவித்துவிட்டதாகவும், அவர் பயிற்சியாளர் தேர்வுக்கும் பரிந்துரைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, மீண்டும் தலைமையேற்கப் போவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Summary

Mumbai Indians are likely to hand over captaincy to Rohit Sharma for their forthcoming IPL season 2027.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.