மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மைக் ஹஸ்ஸி, சிம்மன்ஸ் அதிரடி நீக்கம்... சிஎஸ்கேவில் ஒரே நாளில் 5 பயிற்சியாளர்கள் விடுவிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

Published On :27 அக்டோபர் 2026, 1:23 pm IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரே நாளில் அதிரடியாக 5 பயிற்சியாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் வலுவான அணிகளில் முதன்மையான அணியாகக் கருதப்பட்ட ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த மூன்று தொடர்கள் சரியாக அமையவில்லை.

2024-ல் 5-வது இடத்தையும், 2025-ல் பத்தாவது இடத்தையும், 2026-ல் 8-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றமளித்த சென்னை அணியில் தற்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2027 தொடருக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது பயிற்சியாளர் குழுவில் நீண்டகால பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹஸ்ஸி உள்பட ஐந்து பேரையும் விடுவித்துவிட்டதாக அறிவித்துள்ளது.

2008-ல் சிஎஸ்கே அணியில் வீரராக இணைந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி, ஆறு சீசன்கள் சென்னை அணிக்காக விளையாடினார்.

தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு, 2018-ஆம் ஆண்டில் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங்குடன் இணைந்து பேட்டிங் பயிற்சியாளரானார்.

அவரது பயிற்சியாளர் பதவிக்காலத்தில் சென்னை அணி 2018, 2021 மற்றும் 2023-ல் சாம்பியன் பட்டங்களை வென்றது. இதில் மை ஹஸ்ஸி முக்கிய பங்காற்றியிருந்தார்.

மைக் ஹஸ்ஸி மற்றும் எரிக் சைமன்ஸ் ஆகியோருடன் சேர்த்து, பீல்டிங் மற்றும் உதவி பேட்டிங் பயிற்சியாளர் ராஜீவ் குமார், தலைமை பிசியோதெரபிஸ்ட் டாமி சிம்செக், உடற்தகுதி பயிற்சியாளர் கிரெக் கிங் ஆகியோரும் சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Summary

Chennai Super Kings have parted ways with five coaching staff members, including the batting coach Michael Hussey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.