விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் நன்றாக உணர்ந்ததாக லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நேற்று (மே 7) நடைபெற்ற ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் லக்னௌ தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவர் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ஜித்தேஷ் சர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். விராட் கோலியை 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்து அசத்தினார் பிரின்ஸ் யாதவ்.
இந்த நிலையில், விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் நன்றாக உணர்ந்ததாகவும், அதைவிட அணியின் வெற்றி மிகவும் மகிழ்ச்சியளித்ததாகவும் பிரின்ஸ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலியின் விக்கெட்டினை வீழ்த்திய பிறகு மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஆனால், அணி வெற்றி பெற்றது அதைவிட எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. நான் விக்கெட் எடுத்து அணி தோற்றிருந்தால் நான் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டேன் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள பிரின்ஸ் யாதவ் 16 விக்கெட்டுகளுடன், அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Lucknow team fast bowler Prince Yadav has stated that he felt very good after taking Virat Kohli's wicket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!
முதல் பெண்...

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

பெங்களூரின் அரசன்..! ஆர்சிபி வெளியிட்ட விராட் கோலியின் புதிய புகைப்படங்கள்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


