கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

விராட் கோலி அறிவுரையின்படியே அவரை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ்!

பந்துவீச்சில் அசத்திய பிரின்ஸ் யாதவ் அளித்த பேட்டி குறித்து...

News image

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய பிரின்ஸ் யாதவ். - படம்: ஏபி

Updated On :8 மே 2026, 2:40 pm IST

விராட் கோலியை ஆட்டமிழக்க செய்த லக்னௌ வீரர் பிரின்ஸ் யாதவ் போட்டிக்குப் பிறகு பேசியதில், ”விராட்டின் அறிவுரைதான் அவரை வீழ்த்த உதவியது” எனக் கூறினார்.

நேற்றிரவு ஆர்சிபிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 19 ஓவர்களில் (மழை காரணமாக குறைப்பு) 209/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஆர்சிபி 19 ஓவர்களில் 203/6 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் லக்னௌ வீரர் பிரின்ஸ் யாதவ் வீசிய 1.2ஆவது ஓவரில் விராட் கோலி போல்ட் ஆனார். இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்தப் போட்டியில் மொத்தமாக 4 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிக்குப் பிறகு அவர் பேசியிருப்பதாவது:

முதல் பந்தில் நான் சரியான ஃபீல்டிங்கை அமைக்கவில்லை. ஆனால், என்னுடைய கவனத்தை இழக்கக்கூடாது என நினைத்தேன். கடைசி போட்டிக்குப் பிறகு நான் விராட் கோலியிடம் பேசினேன். லெந்தில் பந்து திரும்பும்வரை அந்த லெந்தை விடக்கூடாது என விராட் கூறினார். நான் அதைத்தான் செய்து விக்கெட் எடுத்தேன் என்றார். இது சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

Prince Yadav dismisses him, acting on Virat Kohli's advice!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.