விராட் கோலி திமிர் பிடித்தவர், அடங்காதவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி திங்கள்கிழமை (ஜூன் 15) தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி, கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு தனது 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காகவும், பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல்-ல் ராயல் சேலங்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும் விளையாடி வருகிறார். பல சாதனைகளை முறியடித்த உலகின் முன்னணி பேட்டர்கள் வரிசையில் வலம் வரும் விராட் கோலி மீது, அவர் ஆடுகளத்தின் உள்ளே சென்றதும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவார், யாருக்கும் அடங்கமாட்டார் போன்ற பல விமர்சனங்கள் உண்டு.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலியுடனான தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி பேசியதாவது:
விராட் கோலி திமிர் பிடித்தவர். அடங்காதவர். எல்லாவற்றையும் அதன் எல்லை வரை கொண்டு செல்பவர். இவை அனைத்தும் உண்மைதான். ஆனால், இவையெல்லாம் களத்தில் மட்டும்தான். களத்துக்கு வெளியே முற்றிலும் நேர்மாறானவர். இவ்வாறு, களத்தில் ஆக்ரோஷமாகவும் களத்துக்கு வெளியே மிகவும் அமைதியாகவும் செயல்படும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரவி சாஸ்திரி பேசியுள்ளார்.
Summary
Former Indian cricket team head coach Ravi Shastri stated on Monday (June 15) that Virat Kohli is arrogant and unyielding.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒருநாள் தொடர்: விராட் கோலி இடத்தில் களமிறங்கப்போவது யார்?

ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்! இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு!

டிராவிஸ் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஆர்சிபி ரசிகர்கள்! வலுக்கும் கண்டனம்!!

லக்னௌவுக்கு எதிரான தோல்வி சிஎஸ்கேவுக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கும்: ரவி சாஸ்திரி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை


